கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின், அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும்
To foster a closely knit, lively, interactive and mutually supportive Kallar families in Singapore.
To gather Kallar families in Singapore through events and initiatives to provide mutual support and serve the community.
கள்ளர் என்ற ஓர் இனமுண்டு; களங்கமற்ற இனமென்ற பெயரும் உண்டு. கங்கை முதல் கடாரம் வரை அறியணை ஏறிய முகவரியும் உண்டு. கடல் கடந்து மும்முடி தரித்த முதல்வன் என்ற வரலாறும் உண்டு. கல்லணையைக் கட்டியும், மைந்தன் மேல் தேரோட்டி நீதி வழங்கியும், புவியில் பெருங்கோயில் அமைத்து, ஔவையின் வரப்புயர பா மாலையையும் ரசித்து, ஈராயிரம் பட்டங்களையும் சுமந்து, பல்லாயிரம் பிறைகளைக் கண்ட வம்சமிது. காலச்சுவடுகள் எமக்களித்த அழியாப் புகழ் கண்டு, வீரமுடன் செங்குருதி சிந்திய இனமிது.
நம் முன்னோர்களான சோழ மன்னர்கள் காலந்தொட்டு, நம் கள்ளர் இனத்தவர் தெற்காசியாவை ஆண்டும், வாழ்ந்தும் வந்ததற்கான வரலாற்றுச் சுவடுகள் இன்றளவும் உள்ளன.
நாம் இன்பமாகவும் நலமாகவும் இன்றும் இந்த சிங்கை மாநகரில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நம் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள நாம் ஒரு அமைப்பாக கூடி செயல்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி முதன் முதலில் சுற்றமும் நட்பும் என்ற பெயரில் தொடங்கி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கண்ணந்தங்குடி மேற்கு கிராமத்தில் பிறந்த திரு ருத்ரா ரவிச்சந்திரன் தேவர் இந்த அமைப்பிற்கு அடித்தளமிட்டு சீரிய முயற்சியை 2007 ஆம் ஆண்டு முன்னெடுத்தார்.
திரு ருத்ரா ரவிச்சந்திரன் தேவரோடு திரு பஞ்சநாதன் சேனைகொண்டார், திரு வளையாபதி தொண்டமான், திரு இளங்கோவன் கோபாலர், திரு சுப்பிரமணியன் சேனைகொண்டார், திரு ராஜகோபால் கோபாலர், திரு சங்கர் பல்லவராயர், திரு பாஸ்கர் கண்டியர் மற்றும் திரு சிவகுமார் அதியமான் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அமைப்பிற்கு நம் சமுதாயத்தோடு ஒன்றிய கயின்ட்ஸ் ஃபேமிலி என்ற புதிய பெயரை நிறுவி அதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை 2011ம் ஆண்டு ஏற்படுத்தினர்.
கயின்ட்ஸ் என்று திரு சிவகுமார் அதியமான் அவர்கள் முன்மொழிய, திரு ருத்ரா ரவிச்சந்திரன் அவர்கள் ஃபேமிலி என்று சேர்க்க கயின்ட்ஸ் ஃபேமிலி உருவானது. கயின்ட்ஸ் ஃபேமிலி அமைப்பிற்கு தன் அலுவலக முகவரியை திரு இளங்கோவன் அவர்கள் வழங்கி உதவினார்.
கயின்ட்ஸ் ஃபேமிலி உருவாக்கத்திற்கு பாடுபட்ட அனைவரின் நோக்கமும், பணியும் போற்றத்தக்கது. இந்த அமைப்பிற்கு இன்றுவரை நம் குல உறுப்பினர்கள் நல்ல ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றனர்.
Copyright © 2024 Kinds Family - All Rights Reserved.