கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின், அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும்
KINDS Family (KINDS stands for Kallar International Development Society) (கள்ளர் குலம்), is one of the organisations based on micro-communities within the larger Tamil community. Its primary aim is to provide a platform for Kallar families to develop a sense of common identity and interest and to nurture the younger generation with their unique culture, values, and practices. The Kallars are an ancient community of Tamils in India, and have a history of rulers, landlords and farmers. They have also been part of Singapore’s Tamil community from the beginning of the colonial period.
KINDS, founded by Rudra Ravichandran and other members of the community, was formally registered in 2011 with A. Ilangovan as Founding President. The Kallar community living in Singapore is estimated to be a few thousand, mainly citizens and some permanent residents. The organisation had about 190 registered members by early 2024. Apart from practicing and preserving their cultural customs and providing support for their community’s educational and professional development, members are active volunteers for many social causes. These included the Tamil Digital Heritage Project and national efforts for sustainability and health promotion.
கள்ளர் குலம் (KINDS Family) என்னும் அமைப்பு, தமிழ்ச் சமூகத்தின் கூறுகளாக உள்ள உட்பிரிவுச் சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளில் ஒன்று. இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் கள்ளர் சமூக அடையாளத்தைப் பேணிக் காப்பதும் அவர்களுக்கே உரிய விழுமியங்களை இளந்தலைமுறையினரிடையே வளர்ப்பதுமேயாகும். கள்ளர்கள் இந்தியாவின் பண்டைத் தமிழ்ச் சமூகங்களுள் ஒரு பிரிவினர். இச்சமூகம், மன்னர்கள், நிலப்பிரபுக்கள், விவசாயிகள் எனப் பலவகையினரின் வரலாற்றைக் கொண்டுள்ளது. காலனித்துவக் காலத் தொடக்கத்தில் இருந்து கள்ளர்கள் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் ஒரு கூறாகவும் இருந்துள்ளனர்.
கள்ளர் குலம், ருத்ரா ரவிச்சந்திரன் என்பாரோடு மேலும் சிலர் சேர்ந்து தொடங்கப்பட்டு, 2011இல், KINDS Family என்னும் பெயரில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. அ.இளங்கோவன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். சிங்கப்பூரில் சில ஆயிரம் கள்ளர்கள் குடியுரிமை பெற்றும் நிரந்தரவாசிகளாகவும் வசித்துவருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த அமைப்பில் சுமார் 190 பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர். கள்ளர் பண்பாடுகளைக் கடைப்பிடித்தல், பாதுகாத்தல், சமூகத்தின் கல்வி, தொழில்முறை மேம்பாட்டிற்கான ஆதரவை வழங்குதல் என்பன அமைப்பின் முக்கியப் பணிகளாக இருந்தபோதும், பல்வேறு சமூகத் தொண்டுகளிலும் உறுப்பினர்கள் அக்கறை காட்டி வந்துள்ளனர். தமிழ் மின்மயத் திட்டம், இயற்கைப் பாதுகாப்பு, சுகாதார மேம்பாடு எனத் தேசிய அளவிலான முயற்சிகளுக்கு அவர்கள் கைகொடுத்திருக்கிறார்கள்.
Copyright © 2024 Kinds Family - All Rights Reserved.